Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொசாவா ஐநாவின் அங்கீகாரத்தை செர்பியா நிராகரித்தது.

2008-ம் ஆண்டில் கொசாவா சுதந்திர நாடா னது என்று வெளியிட்ட அறிவிப்பு சர்வதேசச் சட் டங்களுக்கு முரணானது அல்ல என்று .நா. நீதிமன் றம் வெளியிட்ட தீர்ப்பை செர்பியா நிராகரித்து விட் டது. 1999-ம் ஆண்டில் நேட்டோ படைகள் அமெ ரிக்கா தலைமையில் நடத் திய விமானத் தாக்குதலை யடுத்து அன்றைய யுகோஸ்லேவியாவில் ஒரு மாகாண மாக இருந்த கொசாவா தனி நாடாகப் பிரிக்கப்பட்டது. இந்நடவடிக்கையை யுகோஸ்லேவியாவின் உள் நாட்டுப் பிரச்சனையில் ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடு என்று கூறியது. பின்னர் அமெரிக்கா மற் றும் ஐரோப்பிய முதலா ளித்துவ நாடுகளின் சூழ்ச்சி யால் கம்யூனிச நாடான யுகோஸ்லேவியா பல நாடு களாக உடைக்கப்பட்டது. .நா. நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பை முதலில் வரவேற்ற நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடுகள் கொசாவாவின் பின்னால் அணி திரள வேண்டும் என் றும் அது வலியுறுத்தி யுள்ளது. சுதந்திர கொசாவாவை அமெரிக்காவின் கூட்டணி மற்றும் நட்பு நாடுகளான 69 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இது வரை அங்கீகாரம் அளிக் காத நாடுகள் தீர்ப்புக்குப் பின் அங்கீகாரம் அளிக்கக் கூடும் என்று கொசாவா நம்புகிறது. தன்னிச்சையாக கொசாவா வெளியிட்ட சுதந்திர அறிவிப்பை செர் பியா ஏற்க முடியாது என்று ஹேகு நீதிமன்றத் தீர்ப்புக் குப் பின்னர் செர்பியா ஜனாதிபதி போரிக் டாடிக் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் செர்பியா பலப்பிரயோகம் செய்யாது என்றும் கொசாவாவில் உள்ள அல்பேனிய இனத் தலைவர்களுடன் பேசி சமரசத் தீர்வு காணப் போவ தாகவும் அவர் கூறினார். செர்பியாவின் நெருங் கிய நட்பு நாடான ரஷ்யா கொசாவாவை அங்கீகரிப்ப தில்லை என்ற நிலைபாட் டில் மாற்றம் இல்லை என்று கூறிவிட்டது. சீனாவும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று கூறியுள் ளது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டுமென்று .நா. பொதுக்குழுவில் செர்பியா முறையிடக்கூடும்.

Exit mobile version