Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொங்கோ ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும்:பிரித்தானிய , பிரஞ்சு அமைச்சர்கள்.

01.11.2008.

கொங்கோ மற்றும் அண்டை நாடான ருவாண்டா ஆகியவற்றுக்கு இடையில் நிலுவையில் உள்ள சமாதான உடன்பாடுகளையும், ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் செயற்பாடுகளையும் முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்டும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் குஷ்னரும் தெரிவித்துள்ளனர்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது எழுந்துள்ள நெருக்கடியைத் தீர்க்கும் சர்வதேச ராஜீய முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்டும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் குஷ்னரும் கொங்கோவின் அதிபர் ஜோசஃப் கபீலாவை சந்தித்துள்ளனர்.

கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோமா நகருக்கு இந்த அமைச்சர்கள் தற்போது சென்றிறங்கியுள்ளனர். துத்ஸி கிளர்ச்சிக்காரர்கள் நெருங்கிவருவதை அறிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கோமாவிலிருந்துதான் வெளியேறியிருந்தார்கள்.

அறிவிக்கப்பட்டுள்ள ஒரு போர்நிறுத்தம் தற்போதைக்கு நடைமுறையில் இருக்கின்ற போதிலும், ஐநாவின் உணவு விநியோக மையத்தில் அவலமும் பெருங்குழப்பமும் காணப்படுகிறது என்று கோமாவிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

Exit mobile version