கொக்கச்சான் குளத்தில் இனச்சுத்திகரிப்பை முடித்துக்கொண்ட அடுத்த கணமே அமரிக்க இராணுவத்தோடு இணைந்து மருத்துவமனையத் திறந்து வைத்திருக்கிறார் மகிந்தவின் வாரிசு. அமரிக்காவின் அடியாள் அமைப்பான ஐ.நா வை கரம்கூப்பி அழைக்கிறார் பொன்னம்பலம்.
தமிழ்ப் பேசும் மக்களின் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்களை பேரினவாத அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. ‘எல்லோரும் இலங்கையரே’ என்ற முழக்கத்தின் கீழ் ராஜபக்ச அரசு இனச்சுத்திகரிப்பு நடத்திவருகின்ற அதே வேளை, அதற்கு எதிராகப் போராடவும் குறைந்தபட்சம் போராட்டத்திற்காக மக்களை அணிதிரட்டவும் கூட இலங்கையில் அரசியல் தலைமைகள் கிடையாது.
இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான சவேந்திர சில்வா அமைதிகாக்கும் அதிகாரியாக தொழில் செய்யும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை கோழைத்தனமாக நாட்டிற்குள் அழைக்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படை அழித்துத் துவம்சம் செய்த நாடுகள் எம்முன்னே நீண்டு கிடக்க, அவர்களின் ஐந்தாம் படைபோல அழைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணொயோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எண்ணியிருந்தால் மக்களை அமைப்பாக்கி அணிதிரட்டியிருக்கலாம்.
உலகம் முழுவதும் போராடும் மக்களோடு குறைந்தபட்ச இணைவிற்கு வந்திருக்க முடியும். அழிப்பவர்களின் அடிவருடிகளாக அடிமைவாழ்க்கை உலகமக்களுக்கு எம்மை எதிரிகளாக மட்டுமே இனம்காட்டும்.
ராஜபக்ச அரசு தேசிய இனங்களைச் சிதைக்கும் நோக்கோடு திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்களை மேற்கொள்ள,
அதற்கு தத்துவார்த விளக்கம் கொடுக்கிறது இனவாதக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சி. அனைவரும் இலங்கையரே என்ற முழக்கத்தின் கிழ், தமிழ் மக்கள் தேசிய இனமே இல்லை என்று பிரான்சில் கூட்டம் போட்டு கூக்குரல் போட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரத்தினம்.
தமிழ் மாபியாக் கூட்டங்களோடும், இலங்கை அரச அடிவருடிகளோடும் கைகோர்த்துக்கொண்டு முப்பதுவருடப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தியாகங்களை அவமானப்படுத்தும் கடைந்தெடுத்த இனவாதியான பிரேம்குமார் குணரத்தினம் சம உரிமையை கொக்கச்சான் குளத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களிடம் சென்று பேசிவிட்டு தமிழர்களுக்குக் கூட்டம் போடட்டும்.
இனவாதத்திற்கு எதிராகப் போராடுவதாக எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களிடம் பேசுவதானால், கொக்கச்சான் குழத்திலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றப் போரட்டம் நடத்தட்டும். அது தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரியப் பிரதேசம் என்று அவர்களுக்குச் சொல்லட்டும்.