Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கைதுகளை முடித்துக்கொண்ட கருணாநிதி கோவை பயணம்

தமிழுக்காக போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….”வழக்கறிஞர்கள் போராட்டம் தமிழுக்கு உரிமை கோரும் நியாயமான போராட்டம் ஆகும். அவர்களது போராட்டத்தை நசுக்கும் வகையில் கோவை, நெல்லை, மதுரை, சென்னையில் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது

அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ் வழக்காடு மொழியாக மாற்றப்பட வேண்டும் என்பது குறித்து வை.கோ எந்தக் குறிப்பான கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழில் வழக்காடும் உரிமைகோரிய வழக்கறிஞர்களின் கைது நடவடிக்கையை ஒழுங்குபடுத்தி முடித்துக்கொண்ட கருணாநிதி, செம்மொழி கலந்துகொள்வதற்காக நாளை காலை 11 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார்.

கோவை சென்றடைந்ததும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு கருணாநிதி சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டு, இறுதிக்கட்ட ஆலோசனகளை வழங்க உள்ளார்.

செம்மொழி மாநாட்டையொட்டி முதலமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version