Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கைதிகளைச் சிறையிலடக்கத் துணை போன டக்ளஸ் இன்று விடுதலை செய்யக் கோருகிறார்

douglas_basilபத்துவருடங்களாக இனக்கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தின் அடியாளாகவிருந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென சிறைக் கைதிகள் மீது அக்கறை பிறந்துள்ளது. மகிந்த அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் வாதியாகத் திகழ்ந்த டக்ளஸ் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொள்ள நேரிட்டதும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பfடவேண்டும் எனக் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவே தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படுகிறார் என்று கூறிய டக்ளஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் மகிந்த மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவில்லை என்றார்.

எந்தக் கூச்சமுமின்றி இவர்கள் நடத்தும் அரசியல் வியாபாரத்திற்கு இணைக்க அரசியல் என்று பெயர் வைத்துள்ளனர்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்று துணை இராணுவக் குழுக்களாகச் செயற்பட்ட சமூக விரோதிகளும் இப்போது ஜனநாயகம் கிடைத்துவிட்டதாகக் கூச்சலிடுகின்றனர்.

இராணுவக் குடியிருப்புக்கள் மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவை என சில மாதங்களின் முன்னர் கூறிய டக்ளஸ் இன்று சோதனைச் சாவடிகளை நீக்கவேண்டும் என்கிறார்.

தமிழ்ப் பேசும்மக்களின் அவலங்களை தமது வயிற்றுப் பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொண்ட டக்ளஸ் போன்றவர்களும் புலம்பெயர் தலைமைகளும், அமெரிக்க அடியாட் கட்சிகளும் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். அது மக்களை அணிதிரட்டிப் போராடுவதன் ஊடாக மட்டுமே சாத்தியம்.

Exit mobile version