கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாண்வர்களை விடுதலை செய்யக் கோரும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாக ஊடகங்களில் பரபரப்பாக அறிவித்திருந்தனர். சம்பந்தர் இராணுவத்தை தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அகற்றத் தேவையில்லை எனக் கூறிய அதே வேளை இந்தச் செய்தியும் வெளியானது. சம்பந்தன் வெளிப்படையான பேச்சுக்கு பல இணையங்களில் திருக்குறள் போன்று பல பொழிப்புரைகளை அவரது வால்கள் வெளியிட்டு வந்தன. அதனோடு கூடவே வழக்கு குறித்த செய்தியும் வெளியானது. கைது செய்த ஒருவரை விடுதலை செய்யக் கோரும் அடிப்படை உரிமைகளுக்கான வழக்கு ஒரு மாத எல்லைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எபதே இலங்கையின் சட்ட வரை முறை.
குறித்த ஒரு மாத எல்லை இன்றோடு முடிவடைகிறது. இனிமேல் தாக்கல் செய்யப்படும் எந்த வழக்குகளும் செல்லுபடியற்றதாகிவிடும். கைதான தர்சானந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியைச் சார்ந்தவர் என்ற தகவ்ல்களும் வெளியாகின. இந்த நிலையில் தேசியக் கூட்டமைப்பின் வழக்கு நாடகம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. தமது சொத்து மற்றும் வியாபார நலன்களுக்காக அரசாங்கத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மேட்டுக்குடி நாடகங்களில் இதுவும் ஒன்றோ என எண்ணத் தோன்றுகிறது.