Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி யை விசாரணை செய்ய அணுகும் நெதர்லாந்து அரசு

நோர்வேயில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த நெடியவன் கைது செய்யப்படு விசாரணை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கே.பி யிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை அரசின் சட்ட ஆலோசகர் இலங்கை அரசு நெதர்லாந்து அரச அதிகாரிகளை விசாரணைக்கு அனுமதித்திருப்பதாகவும் ஆனால் கே.பி விரும்ப்பினால் மட்டுமே நீதிபதிக்கு முன்னிலையில் சாட்சி கூறலாம் எனவும் தெரிவிக்கப்ப்படுகிறது. அமரிக்க உளவுத் துறையின் கருத்துப்படி

பார்த்தீபன் தேவராஜா என்பவரது கணனியிலிருந்த தகவல்களின் அடிப்படையில் 20 மில்லியன் பெறுமானமுள்ள பொருட்களை புலிகளுக்காக வாங்குவதற்கான திட்டமிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றுள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டச் உளவுத்துறையின் கருத்துப்படி, இவரது கணனியில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் நெதர்லாந்தில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவரது பெயர் குறிப்பிடப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கே.பி இன்டர்போலினால் தேடப்படும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version