Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி.யின் விசாரணை தொடர்பாக இலங்கை – இந்தியா உறவில் விரிசல்!?

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதென்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் குறித்து புலிகளின் முக்கிய பிரமுகரும் மலேஷிய அரசால் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டவருமான கே.பி யிடம் விசாரணை செய்வதற்காக பாகிஸ்தான் புலனாய்வுக்குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. இந்த விசாரணைக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நடைமுறை காரணமாக இந்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக கே.பியிடம் விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா இலங்கையை பலகாலமாக கேட்டு வந்தபோதிலும் அதனை அனுமதிக்காத இலங்கை தற்போது கொழும்பு வந்திருக்கும் பாகிஸ்தான் புலனாய்வுக் குழுவிற்கு அனுமதி வழங்கியிருப்பது இந்தியாவை பார்க்கிலும் பாகிஸ்தானுக்கு இலங்கை முக்கியத்துவம் கொடுக்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version