அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கே.பியிடம் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் இருந்து வருகிறது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஈழம் என்பது கனவு என அவர் புலம்பெயர் தமிழர்களுக்கு சில காலங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தன் மூலம் இது உறுதியாகி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கே.பியினதும் இலங்கை அரசினதும் சேவை என்ற மாயையைச் சுற்றி புலம் பெயர் நாடுகளில் பல குழுக்கள் உருவாகி வருகின்றன. முன்னைநாள் புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் போன்றோர் ஜனநாயகத்தை உருவாக்கல், இணக்க அரசியல், மனிதாபிமான உதவி போன்றவற்றை சுலோகங்களை முன்வைத்து கே.பி வழங்கும் “சேவையை” நியாயம் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அரசியல் வன்முறைக்கு எதிராக மக்கள் விழிப்படைவது அவசியமானது.