கே.பி இந்தியத் தொலைக்காட்சிக்குக் கூறியவை வருமாறு:
ரஜீவ் காந்தி படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.
இந்திய மக்களுக்கு குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.
தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். இதற்காக எல்லோரும் மன்னியுங்கள். ராஜிவ்காந்தியின் மகன் மற்றும் மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம்.