இலங்கையில் முல்லைத்தீவில் அன்பு இல்லம் என்ற அனாதைகள் இல்லம் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்த கே.பி அங்கிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசினார்.
”வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதியை போரின் பின்னர் பலர் தம்வசம் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்களை எனக்கு தெரியும். அவர்களிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெறுவது கடினமான காரியம். ஆனால் அதனைப் பெற்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த நான் முயற்சி எடுப்பேன்” என்று அவர் கூறினார்.
”என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது” என்றார் கேபி.