Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி உடன் உல்லாசப் பயணம் சென்ற மேலும் இரண்டு பிரித்தானியத் தமிழர்கள்

சிறுபான்மைத் தேசிய இனங்கள் சூறையாடப்படும் இலங்கையில் அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவராக இணைந்துகொண்ட கே.பி என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் பிரதானியைச் சந்தித்து ‘ஆசிபெற’ புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம்படைத்த தமிழர் மேட்டுகுடி கும்பல் ஒன்று படையெடுக்கின்றது. தீவிர புலி ஆதரவாளர்களாகவும், புலி எதிர்ப்பாளர்களாகவும் தம்மை வெளிக்காட்டிக்கொண்ட இவர்களில் பிரண்ட் நகரசபை கவுன்சிலர் நகீரதன் என்ற முன்னை நாள் புலி ஆதரவாளர் இலங்கைக்குச் சென்று கே.பி மற்றும் இனக் கொலையாளி கோதாபய ஆகியோரைச் சந்தித்தமை குறித்து இனியொரு வெளிப்படித்தியிருந்தது. இது இந்த நபர்களின் தனி நபர்சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. மக்கள் சார்ந்த அரசியல் பிரச்சனை.
ஆக, இவைகள் இந்த நபர்கள் மீதான தனி நபர் குறித்த் அவதூறுகள் அல்ல அரசியல் சார்ந்த பிரச்ச்சனை. மக்கள் இவர்களது உண்மை முகத்தை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வகையில் பிரித்தானியாவிலிருந்து கே.பி உடனும் கோதாபய ராஜபக்சவுடனும் உல்லாசப்பயணம் சென்ற பிரித்தானியத் தமிழர்களில் மேலும் இருவர் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகாந்தன் என்ற கணக்காளர் இவர்களில் ஒருவர். கணக்காளர் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சிவகாந்தன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகத் தன்னை புலம்பெயர் அரசியலில் முன்நிறுத்தியவர். மாவீரர் தினத்தின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான இவர் மாவீரர் தினம் நிறைவுறும் போது அதன் மேல்தளத்தில் பணம் கணக்கிடுபவர்களில் ஒருவர். புலிகள் சார்பாக பெருந்தொகையான பணச் சேர்ப்பில் ஈடுபட்டவர்.
மூன்றாமாவர் விக்னேஸ்வரன் என்ற பல்பொருள் அங்காடிகளை நடத்திவரும் வியாபாரி. பிரித்தானியாவில் லண்டன் புற நகர்ப்பகுதிகளில் பல்பொருள் அங்காடிகள் சிவற்றை நடத்திவருபவர். புலிகளின் ஆதரவாளராகத் தன்னை முன்நிறுத்தியவர்.
தேசியம், போராட்டம் என்ற தலையங்கத்தில் மக்களைச் சூறையாடும் அரசியலை விடுத்து மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் என்பதைத் தமிழ்ப் பேசும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இனக்கொலையாளி கோதாவையும் உளவாளி கே.பி ஐயும் சந்தித புலம்பெயர் முகவர்கள்

உளவாளிகளின் உல்லாசம் : கே.பியும் 22 நண்பர்களும்

Exit mobile version