விடுதலைப் புலிகளின் பணத்தை அரசாங்கத்தினர் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட தருணத்தில், புலிகளின் சிரேஸ்ட தலைவர், சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல் முகவர் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதன், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மட்டுமன்றி இலங்கைப் படையினரை படுகொலை செய்வதற்கு பிரபாகரனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளார் என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குமரன் பத்மநாதனிடம் 200000 மில்லியன் ரூபா சொத்துக்கள் காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
வங்கி வைப்புகள், கப்பல்கள், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் காணப்படுவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
200,000 மில்லியன் ரூபா சொத்துக்களுக்கு என்ன நடந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குமுரன் பத்மநாதனை அரசாங்கம் விடுதலை செய்ததன் காரணத்தை நாம் அறிவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவு பணம் வழங்கப்பட்டிருக்கும் அல்லது வேறும் ஏதேனும் தீமையான நோக்கம் காணப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.