Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி இன் சுதந்திர வாழ்வும் போராளிகளின் அவலமும் : அமச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்

எந்தவொரு குற்றவாளியும் அரச தரப்பு சாட்சியாக மாறமுடியும் எனவும் அந்த வகையிலேயே கே.பியும் அரச சாட்சியாக மாறி வடக்கில் பணியாற்றி வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிடுகின்றார்.
சர்வதேச கொடுக்கல் வாங்கள், மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் கே.பியின் அனுபவத்துடன் அரசாங்கம் அவரைப் பயண்டுபடுத்திக் கொள்வதாகவும், புலம் பெயர் தமிழர்களை தாம் தொடர்ச்சியாக விரோதிகளாகவே பார்க்காமல் அவர்களையும் இந்த நாட்டின் வளர்ச்சியின் பங்காளர்களாக மாற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இன்னும் ஆயிரக்கணக்கான அப்பாவிப் போராளிகள் இனப்படுகொலை அரசின் சாட்சியாக மாறாததால், அல்லது காட்டிக்கொடுக்கததால் இன்னும் சிறையிலேயே வாடுகின்றனர். பலர் கைது செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சரணடைந்த போராளிகள் பலர் தெருக்களில் அனாதைகளாக் கைவிடப்பட்டுள்ளனர். சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டுள்ள மூன்றாம் பிரஜைகளாக இவர்களின் வாழ்வு அவலத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் கே.பி காட்டிக்கொடுத்ததானால் சுதந்திர வாழ்வு வாழ்கிறார்.

Exit mobile version