சிங்கப்பூரில் நான்யங் தொழில் நுட்பப் பல்கலைகழகத்தில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் சர்வதேச அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கான ஆய்வுமையம் என்ற தன்னார்வ நிறுவனத்தின் தலைவரான ரோகான் குணவர்தன வன்னி இனப்படுகொலைகளின் போது மகிந்த அரசாங்கத்திற்குச் சார்பான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பிரதான பாத்திரம் வகித்தவர்.
கே.பி மலேசியாவிலிருந்து இலங்கை அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் தனது பங்கு முதன்மையானது என சம்பவம் நடந்த காலகட்டத்தில் தெரிவித்தவர்.
நாடுகடந்த தமிழீழம் என்பது கே.பி உருவாக்கிய ஒன்றே என்பதும். பிரபாகரன் சரணடைவு தொடர்பில் முக்கிய பங்காற்றிய சர்வதேச ஆயுதக் கடத்தல்காரரான கே.பி இலங்கை அரச உளவாளி என்ற சந்தேகம் முன்னமே பலரால் எழுப்ப்பப்பட்டிருந்தது.
இலங்கை அரச படைகளால் கே.பி எப்போதுமே சித்திரவதை செய்யப்படவில்லை எனவும் எக்ஸ்பிரஸ்பஸ் என்ற செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய தொலைபேசிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச படைகளால் கே.பி எப்போதுமே சித்திரவதை செய்யப்படவில்லை எனவும் எக்ஸ்பிரஸ்பஸ் என்ற செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய தொலைபேசிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றவாளிகளோடும், இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளோடும், பாசிஸ்டுக்களோடும், போரின் பின்னர் வெளிப்படையாகவே இணைந்துகொண்ட நூற்றுக்கணக்கானோரில் கே.பியும் ஒருவர்.?