Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பியை கைது செய்த விதம் பற்றி குறிப்பிட்டால், அரச இரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றஞ் சுமத்துவார்கள் : சரத்

விடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி. (குமரன் பத்மநாதனை) வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: கே.பியை கைது செய்த விதம் பற்றி குறிப்பிட்டால், அரச பாதுகாப்பு இரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றஞ் சுமத்துவார்கள் என்பதனால் அதனை கூற நான் விரும்பவில்லை. இராணுவ வீரர்கள் சிறைக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கே.பி.வடக்கில் சுற்றுலா செய்கின்றார்.

அவரது கணக்கில் பில்லியன் டொலர்கள் இருக்கின்றன. வடக்கில் மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர் கூட்டங்களை நடத்துகிறார். கே.பியை. வடமாகாணத்தின் முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.

Exit mobile version