Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோடன் வைசும் பொய் சொல்கிறார் : இலங்கை அரசு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதிக எண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கோர்டன் வைஸ் வெளியிட்டு வரும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை எவ்வாறு துன்புறுத்தினார்கள் என்பது தொடர்பிலும், தாம் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு வீடியோ காட்சிகள் மூலம் நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து நீண்ட காலத்தின் பின்னர் பொதுமக்கள் இழப்பு குறித்து வெளியிடப்படும் கருத்துக்களை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து எட்டு மாதங்கள் கழிந்துள்ள நிலையில் வேறு எந்தவொரு அமைப்பும் பாரியளவு பொதுமக்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக கருத்து எதனையும் வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களில் உண்மையிருந்தால் எவரும் எட்டு மாத காலம் வரையில் மௌம் காத்திருக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கோர்டன் வைஸ் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக கடந்த காலங்களிலும் அவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version