பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவும் யூரோ நாணயத்தைப் பாதுகாக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்ததை வெள்ளியன்று காலை (09/12/11) முன்மொழிவதற்கான ஒன்று கூடல் இடம்பெற்றது. இதன்போது புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய பொருளாதார ஒழுங்குமுறை ஒன்றை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்வைத்தன. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் இத் திட்டத்தை வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்து நிராகரித்தார்.
இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பும் யூரோ நாணயத்தின் தொடர்ச்சியும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல்கேரியா மற்றும் பிரித்தானியாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகள் ஒன்றிணைந்து புதிய ஒப்பந்ததை அமுலுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
டொலரைச் சார்ந்துள்ள அமரிக்க பிரித்தானிய வங்கிகளுக்கும், யூரோ வியாபாரத்தில் தங்கியுள்ள ஐரோப்பிய வங்கிகளுக்கும் இடையேயான போட்டியாகவே இந்த முரண்பாடு கருதப்படுகின்றது.