Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேள்விக்குள்ளாகியுள்ள பிரித்தானியாவின் சில்லரை வணிகம்

பிரித்தானியா எங்கும் பெரிய நிறுவனங்களின் சில்லறை விற்பனை முகவர்களான 140 நிலையங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ளதாக பிரித்தானிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் நிலையிலிருப்பதாகத் தெரிவிக்கபடுகின்றது. தவிர 13700 சில்லரை விற்பனை நிலையங்கள் மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் உள்ளூர் தரவு நிறுவனத்தின்- Local Data Company (LDC)- அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதத்திலேயே ஏழில் ஒரு சில்லரை வணிக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கின்றது. பிரித்தானிய சில்லரை வணிகம் துயரமான வருட முடிவைச் சந்திக்கின்றது.

Exit mobile version