Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேரள முதல்வரை பழிவாங்க துடிக்கும் பாஜக!

கேரள முதல்வர் பினராயி விஜயனை தங்கக் கடத்தல் வழக்கில் சிக்க வைத்து தேர்தலுக்கு முன்னர் அவரை பொதுவெளியில் அவமானப்படுத்த திட்டமுட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கேரளத்தில் மட்டுமே இடதுசாரிகளின் ஆட்சி உள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் ஆட்சிக்காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அதிகம். இயற்கை பேரிடர்கள், வெள்ள சேதம், நிலச்சரிவு என கேரளாவில் வரலாறு காணாத பெருந்துயரம் சூழந்தது. அதை தனது நிர்வாகத்திறனால் எதிர்கொண்ட கேரள முதல்வர்,.இன்னொரு பக்கம் சபரிமலையில் பெண்கள் விவகாரத்தையும் எச்சரிக்கையுடன் கையாண்டார். பாஜாக ஏவிய அஸ்திரங்கள் அனைத்தையும் தனது சிந்தாந்தத் தெளிவாலும், நிர்வாகத்திறனாலும் முறியடித்தார்.


ஆனால், சமீபத்தில் பூதகரமாக வெடித்துக் கிளம்பிய தங்கக் கடத்தல் வழக்கில் நேரடியாக அவரை சிக்க வைக்கும் சதித் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தங்கக் கடத்தல் சொப்னா என்ற பெண்ணையும், முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரையும் கைது செய்த சுங்க இலகாவும், அமலாக்கத்துறையும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா “முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என என்னை நிர்பந்திகிறார்கள்” என்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இப்போது கேரளத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சொப்னாவிடம் வாக்குமூலம் பெற்று அதை தேர்தலுக்கு பயன்படுத்த பாஜக நினைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதோடு, கேரள அமலாக்கத்துறையை தவறான கையாள்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் என்றும் பினராயி விஜயனே குற்றம் சுமத்தியுள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர்,கேரளாவிற்கு வருகை தந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள உட்கட்டமைப்பு நிறுவனமான கிபி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அனைத்து தகவல்களையும் அமலாக்கத்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.இதுகுறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மத்திய அமலாக்கத்துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version