
2 நாட்களாக இந்த ஈழத் தமிழர்கள் கொல்லத்தில் தங்கியுள்ளனர். பிடிபட்டவர்களில் ஒருவரான சிவசுப்ரமணியன் என்பவர், கடந்த ஆண்டு தனது மனைவியின் சிகிச்சைக்காக முல்லைத்தீவிலிருந்து தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் இவர்கள் இலங்கையில் இருப்பது தொடர்பாக அச்சமடைந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் நோக்கோடு கேரளத்திற்கு வந்து சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. சுமார் ஐம்பது பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமை ஆர்வலர்கள் கவனிப்பார்களா..?