இது தொடர்பாக அக்கல்லூரி முதல்வர் மற்றும் 11 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தவாரம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை கேரள மாநிலம், குன்னம்குளத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் வெளியிட்ட மலரில் ‘எதிர்மறையான முகங்கள்’ என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருந்தனர்.
மோடியின் புகைப்படங்களுக்கு அருகே ஹிட்லர், ஒசாமா பின்லேடன், அஜ்மல் கசாப் ஆகியோர் படங்களும் இருந்தது சர்ச்சையை உண்டாக்கியது. இது தொடர்பாக அந்த பாலிடெக்னிக்கில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த 392 புத்தகங்கள், புத்தகம் வடிவமைக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ‘ஹார்டு டிஸ்க்’ போன்றவைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அப்பாலிடெக்னிக் முதல்வர் கிருஷ்ணன் குட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்திய மாணவர் பேரவையை சேர்ந்த மலர் எடிட்டரான மாணவர் உள்பட 6 மாணவர்களை மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.
தன்னை இந்துத்துவா அரச பாசிஸ்டாக வெளிக்காட்டிக்கொள்ளும் மோடி அதற்கு ஏற்றாற்போல் விமர்சிப்பவர்கள் மீது அடிதடி போலிஸ் ஒடுக்குமுறை போன்றவற்றை ஏவிவிடுகின்றது. இந்துத்துவா முகமூடிக்குள் புகுந்துகொண்ட மோடி பல்தேசியச் சுரண்டலுக்காக இந்தியாவைத் திறந்துவிட்டுள்ளார் என்பதே இங்கு உண்மை.
தற்போது கேரளாவில் மற்றொரு கல்லூரியிலும் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் வாசகங்கள் வெளியிடப்பட்டுள்ளது பிரச்சினையை உண்டாக்கியுள்ளது.
கல்லூரியில் வெளியிடப்பட்ட மலர் ஒன்றின் குறுக்கெழுத்துப் போட்டியில் மோடியின் தோற்றம் தொடர்பாக அவர்கள் விரும்பாத தெரிவுப் பதில்கள் தரப்பட்டிருந்ததால் , பாரதீய ஜனதா கட்சியினரும், கட்சியின் இளைஞர் அணியும் கல்லூரி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மற்றும் 11 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, கல்லூரி முதல்வரிடம் கேட்கப் பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.