Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேரளாவில் சி.பி.எம் வன்முறையும் கைதும் கொலையும்

கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் ஜெயராஜன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போரா‌ட்ட‌த்தை அ‌க்க‌ட்‌சி நட‌த்து‌கிறது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், கீழரா எனும் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணிப் பிரமுகர் அப்துல் சுக்கூர், கடந்த பிப்ரவரி மாதம் மார்க்சிஸ்ட் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.ஜெயராஜனுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகித்த போலீசார், அவரை விசாரணைக்கு அழைத்தனர்.
இரண்டாவது முறையாக காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜரான பி. ஜெயராஜனை நே‌ற்று போ‌‌லீசா‌ர் கைது செ‌ய்தன‌ர்.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ஜெயராஜ‌ன் கைது க‌ண்டி‌த்து மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் கேரளா‌வி‌ல் இ‌ன்று முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌ந்த வரு‌கிறது.
போராட்டங்களின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வன்முறை இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் கட்சி என்று வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கொலைகாரக் கட்சி. கேரளத்தில் சி.பி.எம். கட்சியிலிருந்து பிரிந்து சென்று “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை நடத்திவந்த டி.பி. சந்திரசேகரனை கடந்த மே மாதத்தில் கொடூரமாக வெட்டிக் கொன்ற சி.பி.எம். கட்சியின் கொலைவெறியாட்டம், இந்த உண்மையை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.
இப்படுகொலையும், “அரசியல் கொலைகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளோம்” என்று பொதுக்கூட்டத்திலேயே இடுக்கி மாவட்ட சி.பி.எம். செயலாளரான எம்.எம். மணி திமிராகப் பேசியிருப்பதும், சந்திரசேகரன் படுகொலையையொட்டி சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் கோஷ்டியும் பினாரயி விஜயன் கோஷ்டியும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டிருப்பதும், அரசியல் எதிரிகளைத் திட்டமிட்டு கொலை செய்வதை சி.பி.எம். கட்சி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை கேரளம் மட்டும் மட்டுமின்றி, நாடு முழுவதும் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.
இவ்வாண்டு பிப்ரவரியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஊழியரான 22 வயதான அப்துல் சுக்கூர் சி.பி.எம். கொலைகாரர்களால் நட்டநடு வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Exit mobile version