Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேரளத்தில் விடுதலைப் புலி கைது?

போருக்குப் பின்னர் உயிர் தப்பி பல நூறு போராளிகளும், ஈழ மக்களும் தென்னிந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். எங்காவது ஒரு இடத்தில் போய் நிம்மதியாக அடைக்கலம் தேடுவதைத் தவிற அரசியல் திட்டம் எதுவும் இவர்களுக்கு இல்லை. இம்மாதிரி வந்தவர்கள் பலர் பல மதாங்களாக கேரள போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கி புலி முத்திரை குத்தப்பட்டு சிறபடுகிறார்கள். இம்மாதிரி நபர்களை கடல் வழியே கடத்தி பணமும் பெற்றுக் கொண்டு இதை தொழிலாகவும் சிலர் செய்கிறார்கள்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த டென்னிசன் மற்றும் அந்தோனி ஆகிய இருவரை போலீஸôர் கேரளத்தில் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை கேரளத்துக்கு அழைத்து வந்து திருட்டுத்தனமாக படகு மூலம் ஆஸ்திரேலியா அனுப்ப திட்டமிட்டிருந்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கைத் தமிழர்களை வெளிநாடுகளுக்கு திருட்டுத்தனமாக அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியவர் பராபரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸôர் அவரை கைது செய்தனர். வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைத் தமிழர்கள் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிப்பதற்கான நடவடிக்கையில் பராபரன் ஈடுபட்டுவந்ததாக கேரள போலீஸôர் தெரிவித்தனர்.

Exit mobile version