Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.கே.எஸ் சீமெந்து ஆலையை மீள இயங்க வைக்க அரசு தீர்மானம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் சிசிறி பரணகம தெரிவித்துள்ளார்.

இத்தொழிற்சாலை கடந்த 18 வருடங்களாக மூடப்பட்டிருந்த போதும் இங்கு உள்ள பல இயந்திரங்கள் செயற்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. இத்தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் யாழ்.குடாநாட்டில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதோடு மக்களுக்கு நியாய விலையில் சீமெந்தை விநியோகிக்கவும் வழியேற்படுமென அரசு எதிர்பார்க்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் சிசிறி பரணகம தெரிவித்துள்ளார்.

இதே சீமெந்துக் கூட்டுத்தாபனம் இந்திய ஆதித்தியன் பிர்லா வியாபாரக் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட இருப்பதும் தெரிந்ததே.

Exit mobile version