அரசாங்கத்தின் அனுசரனையில் சிறி டெலோ அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போலியான கச்சேரி மூலம் இந்த மோசடிகள் அரங்கேற்றுப்பட்டு வருவதுடன் இவர்கள் அறவிடும் தொகையில் குறிப்பிடதக்களவு பங்கு அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்ளப்படுகிறது எனவும் மேலும் தெரியவருகிறது. சிறிடெலோ அமைப்பின் பொறுப்பாளராக உதயன் என்பவர் செயற்பட்டு வருகிறார். இவர் நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று அந்நாட்டு குடியுரிமை பெற்றவராவார்.
இவரை தவிர ஜெர்மனியில் குடிரிமை பெற்ற நிமோ இந்த அமைப்பில் செயற்பட்டு வருகிறார். இதேவேளை இந்த மோசடியில் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற கீரன் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளார்.
அரசாங்கம் மன்னார் கர்பக் வீதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கிய காணிகளுக்கே இவர்கள் பணத்தை அறவிட்டு, அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் இந்த காணிகளில் பெரும் பகுதியை இவர்கள் தமது உறவினர்களுக்கு பங்கிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அந்தத் தகவல்களின் மூலம் தெரியவருகிறது.
லங்காநியூஸ்வெப் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சி தரும் தகவலை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
நன்றி : லங்கா நியூஸ் வெப் (lankanewsweb.com)