Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலைகளையும் பாலியல் வன்மங்களையும் நியாயப்படுத்தும் மனித உரிமை அமைச்சின் செயலாளர்

rajeeva-wijesinghaவவுனியா வதைமுகாம்களில் இளம் தமிழ் பெண்களுக்கு எதிராக ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க நியாயம் கற்பித்துள்ளார்.

சிறீலங்கா படைகளால் வவுனியா வதைமுகாம்களில் பாலியல் கொடூரங்களுக்கு தமிழ் பெண்கள் உட்படுத்தப்பட்டமை தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைக்கும் பொழுதே இவ்வாறு ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

“வவுனியா முகாம்களில் பல பாலியல் உறவுகள் இடம்பெற்றன. அங்கு எதுவும் நடக்கவில்லை என்று என்னால் கூறமுடியாது. ஏனென்றால் நான் அங்கு இருக்கவில்லை. தனித்தனியாக பாலியல் முறைகேடுகள் அங்கு நிகழ்ந்திருக்கலாம். இவற்றை எமக்குத் தெரியப்படுத்தினால் இவை தொடர்பான விசாரணைகளை நாம் முன்னெடுப்போம்.

வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம். என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது.” என்றார் சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க.

Exit mobile version