மெல்பர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அமைச்சர் கடுமையான மது போதையில் இருந்ததாகவும் ஹோட்டலின் 3ஆம் மாடியின் பல்கனியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டல் அறை மூடப்படடிருந்த காரணத்தினால் பல்கனி வழியாக அறைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் விபத்துக்குள்ளான விடயத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தமது புதல்வர் சுகவீனமுற்றிருப்பதாகவும் அவரை பார்வையிடுவதற்காக அமைச்சர் அவுஸ்திரேலியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.