தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பு என்பதால் அது கட்டுப்பாடான ஒரு அமைப்பு அல்ல. அது ஒரு கட்சியாக இல்லை. முன்பு தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஒரு கூட்டாக இருந்து பின்னர் ஒரு கட்சியாகப் பரிணமித்தது. அதே போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட ஒரு கட்சியாகப் பரிணமிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்ட போதும் தமிழரசுக் கட்சி அதற்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து இயங்குவதால் விரிசல்கள் அதிகமாகின்றனவே தவிர ஒற்றுமை ஏற்படுவது கடினம் என அவர் மேலும் தெரிவித்தார். அவ்வாறான நிலைமை காரணமாக ஒரிருவரே முடிவுகளை எடுக்கின்றனர் என அவர் தெரிவித்தார். தவிர, கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு எனத் தெரிவித்தார்.