பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் காலையில் வந்து இரவில் ஊருக்கு திரும்பி மீண்டும் காலையில் வந்து விடுகின்றனர்.பகல் முழுவதும் ஆறு நாட்களாக 20000 பேரும் பட்டினி கிடக்கின்றனர்.பள்ளி மாணவ,மாணவியர் சீருடையுடன் பள்ளியை புறக்கணித்து வந்து முழக்கம் போடுகின்றனர்.
தமிழக வரலாற்றில் கண்டறியாத போராட்டம் இது . வெளி உலகில் இப்போராட்டத்தின் பிரம்மாண்டம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.ஊடகங்கள் அரசுக்கு சரியாக செய்தி வெளியிட வில்லை.சமூக உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய போராட்டம் இது.
இது கூடன்குள மக்களின்வாழ்வியல் பிரச்சனை மட்டுமல்ல,தமிழக மக்களின் உயிர் பிரச்சனை மட்டுமல்ல,மனித இனத்திற்கே சவாலான பிரச்சனை.