அந்த கடிதத்தின் ஒரு பகுதி கீழே:
அணு உலையில் அணு எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற உள்ளது.. முதல் யூனிட்டில் இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவேகடந்த மார்ச் 31ம் தேதி கடிதம் எழுதப்பட்டுள்ளது.இதற்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை.
தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. ஏற்றுக்கொள்ளக்கூடியது. மின்பகிர்மானத்தில் இன்னும் பிரச்னைகள் உள்ளது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என கூறியுள்ளார்.