கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஜி.சுந்தர்ராஜன், பிரசாந்த் பூஷண் ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை சாரணைக்கு வந்தது.
அப்போது, அணு உலை செயல்பாடு, பாதுகாப்பு குறித்து மனுதாரர்கள் சார்பில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற சாரணையின்போது எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு ளக்கம் அளிக்கும்படி அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதியை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
இயற்கை அனர்த்தங்களும் திடீர் அழிவுகளும் இந்த அணு மின் நிலையட்ய்திற்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு வருவதில்லை. ஜப்பானிலும் ஆரம்பித்து உலகம் முழுவதும் அணு மின் நிலையங்கள் மூடப்படுவதும் இதனாலேயே. தனது சொந்த நாட்டுகுள்ளேயே குப்பைகூளங்களைக் கூட ஒழுங்குபடுத்த முடியாத போக்குவரத்து விதிகள்கூட இல்லாத ஒரு அரசு, இலங்கையின் கொல்லைப்புறத்தில் அணுகுண்டை நட்டுவைத்திருக்கிறது.