Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் – எதிராகப் போராடினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரமணிய சுவாமி

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்து இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் நாட்டில் பார்பன அதிகாரத்தின் குறியீடாகத் திகழும் சுவாமி, ராஜபக்ச அரசையும் ஆதரித்து வருபவர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில்தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அணு உலை இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதே என்றும், இந்த விஷயத்தில் மக்கள் போராடத் தேவையில்லை என்றும் பேட்டியளித்தார். மேலும் பயந்தால் வரலாறு படைக்க முடியாது என்றும் அப்துல் கலாம் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ஆதரவாக அப்துல் கலாம் மேற்கண்டவாறு தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
அப்துல் கலாம் காப்ரட் முதலாளிகளுக்காக மக்கள் உயிரைப் பணயம் வைத்து வரலாறு படைக்க வேண்டும் என்கிறார். இது வரையில் இவரின் வழியில் படைக்கப்பட்ட வரலாற்றில் உலகின் வறிய நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.

Exit mobile version