Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் இரண்டாவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது

கூடங்குளத்தில் இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது,
அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் இன்று நடத்தும் போராட்டடத்தில் கலந்துகொள்ள வருபவர்களை தடுத்து நிறுத்த போலீசார் காட்டுப்பகுதியில் அகழி தோண்டினர். இதேபோல் கடல்வழியாக கூடங்குளம் அணுமின்நிலைய பகுதிக்குள் போராட்டக்காரர்கள் ஊடுருவாமல் தடுக்க கடலோர காவல்படை போலீசார் கடல்பகுதி மற்றும் கடற்கரைகளில் ரோந்து வந்தனர்.மாநில போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். மத்திய அரசின் அதிரடிப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
தடையை மீறி பேரணியாக வருபவர்களை தடுத்துநிறுத்தி கைது செய்வதற்காக போராட்டக்காரர்கள் வரமுடிவு செய்திருந்த வைராவி கிணறு மற்றும் தாமஸ் மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் கலவர தடுப்பு வாகனங்களுடன் தயாராக நின்றனர். ஆனால் போராட்டக்காரர்களோ, முதலில் திட்டமிட்டபடி சாலை வழியாக வராமல், இடிந்தகரை கடற்கரை வழியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
இதனை போலீசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அந்த வழியில் சென்றால் அணுமின்நிலையத்திற்கு மிகவும் அருகாமையில் சென்று விடலாம். இதனைத்தொடர்ந்து வைராவிகிணறு மற்றும் தாமஸ் மண்டபம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக கூடங்குளம் அணுமின்நிலையத்தின் கிழக்கு கண்காணிப்பு கோபுரம் இருக்கும் பகுதிக்கு 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துசேர்ந்தனர்.
அவர்கள் வந்த அதே நேரத்தில் போராட்டக்கார்கள் ஆயிரக்கணக்கானோர் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமையில் திரண்டுவந்தனர். அவர்களை தொடர்ந்து முன்னேறவிடாமல் போலீசார் தடுத்துநிறுத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அணுமின்நிலையத்திலிருந்து 500மீட்டர் தொலைவே உள்ள கடற்கரையில்அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடற்கரையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் சுற்றிவளைத்து உள்ளதால், கூடங்குளம் பகுதியில் இருந்து யாரும் அங்கு செல்ல முடியாக நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் கூடங்குளம் அன்னம்மாள் ஆலயம் முன்பு மேலும் பலர் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Exit mobile version