இதற்கிடையே இடிந்தகரை கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு வரும் பாதைகளை அடைத்து உள்ளனர். இடிந்தகரைக்கு செல்ல தாமஸ் மண்டபம், வைராவிகிணறு விலக்கு ஆகிய பகுதிகள் வழியாக 2 பாதைகள் உள்ளன. இந்த 2 பாதைகளிலும் எந்த வாகனங்களும் போய்வர முடியாதபடி பெரிய கற்கள் மற்றும் மரங்கள், முள்மரங்களை வெட்டிப்போட்டு உள்ளனர்.
பஸ் நிறுத்தங்களில் வைக்கப்பட்டு இருக்கும் சிமெண்டு இருக்கைகளை தூக்கி வந்து சாலையின் குறுக்காக போட்டு உள்ளார்கள். இதனால் இடிந்தகரை கிராமத்துக்கு யாரும் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போல் ஊரின் உள்ளே இருந்தும் வாகனங்கள் எதுவும் வெளிவர முடியாதபடி அடைக்கப்பட்டு உள்ளது.
இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்துவரும் உதயகுமார் தான் கைது செய்யப்படுவதைக் கண்டு பயப்படவில்லை என்று தெரிவித்தார்.
அரசுப் பணத்தை நான் திருடவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. பின்னர் ஏன் நான் பயப்பட வேண்டும் என்றார் அவர்.