Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலை 40 நாள்களில் செயல்படத் தொடங்கும் : வி.நாராயணசாமி

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலை இன்னும் 40 நாள்களில் செயல்படத் தொடங்கும் என்று மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.
“தற்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கூடங்குளம் அணு நிலையத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அவர்கள் அணு உலை தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் சான்றிதழ் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்படும். பரிசோதனை அடிப்படையில் 20 நாள்களுக்கு அணு உலை இயக்கப்படும்.
அதன் பிறகு இன்றிலிருந்து சரியாக 40-வது நாளில் 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் அணு உலை மின் உற்பத்தியைத் தொடங்கும்’ என்று அவர் தெரிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய அவர், கூடங்குளத்தில் ரூ.15,824 கோடியில் தொடங்கப்பட்ட அணு மின் நிலையம் உள்ளூர் எதிர்ப்பாளர்களின் போராட்டம் காரணமாக கடந்த 8 மாத காலமாக முடங்கியிருந்தது.
இந்த அணு மின் நிலையம் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்காத அளவுக்கு மிகுந்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டமான கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசு மிகுந்த ஒத்துழைப்பு தந்து வருகிறது.
இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பெரும் அழிவுகளை ஏற்படுத்தவல்ல கூடங்குளம் அணு மின் நிலையம், பல் தேசிய நிறுவனங்களின் நலனுக்காக உருவாக்கப்படுகின்றது.

Exit mobile version