Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் அணு மின் நிலையம் : கண்டனக் கூட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ளதாக ஜெயலலிதா அமைத்த குழுவினர் அறிவித்தனர்.
இந்த நிலையில், போராட்டக்குழு சார்பில் 72 மணி நேர உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. உண்ணாவிரத பந்தலில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், “போராடும் மக்கள் சார்பில் தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவிடம் 2 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. போராடும் மக்களை சந்திக்காமலும், போராட்டக்குழுவினர் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை சந்திக்காமலும் தமிழக குழுவினர் சென்னை சென்றதன் மூலம் நமது 2 கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.
தமிழக குழுவினர் மீண்டும் கூடங்குளம் வந்து போராடும் மக்களை சந்திக்க வேண்டும் என்று கோரி இந்த 72 மணி நேர உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறோம். நிபுணர் குழுவினர் தமிழக அரசிடம் அளிக்கும் அறிக்கையில், கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று கூறப்பட்டு இருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கையை கொளுத்துவோம் என உதயகுமார் தெரிவித்தார்,

இதே வேளை சென்னையில் கண்டனக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!

பொதுக்கூட்டம்
பிப்ரவரி 25, மாலை 6 மணி
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை
தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை
தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு

தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு

புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு

பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக

தொடர்புக்கு

முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

Exit mobile version