இனபடுகொலையாலும், ராஜபக்ச அரசின் இனச் சுத்திகரிப்பாலும் அழிந்துகொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களையும், சிங்கள உழைக்கும் மீனவர்களையும் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கூடங்குளம் அணு மின்நிலையத் திட்டம் குறித்து தமிழர்களின் நலன் குறித்துப் பேசும் புலம் பெயர் மற்றும் தமிழ்க் கட்சிகள் மௌனம் காத்து வருகின்றன. அணுக் கழிவுகள் கடல் வளத்தைப் பாதிக்கும் அதே வேளை விபத்து ஏற்படும் நிலையில் வடக்கு கிழக்குப் பகுதிகள் அணுக் கதிர்வீசால் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இது இன்னுமொரு மனித அவலத்திற்கான நச்சு விதை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் கூட தமது ஏகாதிபத்திய மற்றும் இந்திய மேலாதிக்க நலன் சார்ந்து அபாயங்களைப் புறக்கணித்து வருகின்றனர்.
ஜப்பானில் 54 அணு உலைகளில் ஒன்று மட்டுமே இப்போது உற்பத்தியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. புகுஷிமா விபத்தின் பின்னர் மக்கள் மத்தியில்ருந்தான எதிர்ப்பின் பின்னர் ஜப்பானிய அரசு மேற்கொண்ட முடிபே இது.