“”கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக முனைவர் முத்துநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழுவினர் 70 பக்க அறிக்கையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருப்பதாக அறிகிறோம். இந்த அறிக்கையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், அணு உலை பற்றிய கருத்துக்களை திரித்துக் கூறி வருவதாகவும், அணுமின் நிலையம் முழுப் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த நகலை நாங்கள் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை.
மத்திய நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது. முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் இருந்தே அணுமின் நிலையம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வந்தனர். அவர்களுக்கு அணுசக்தி குறித்த போதுமான அறிவு கிடையாது. எனவே நாங்கள் அமைத்துள்ள நிபுணர் குழுவுடன் பேச வேண்டும் எனக் கூறி வருகிறோம். ஆனால் எந்தக் கருத்துப் பரிமாற்றத்திற்கும் அவர்கள் முன்வரவில்லை.
மத்திய நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் சாந்தா, முனைவர் முத்துநாயகம் உள்ளிட்ட அனைவரும் தொடக்கத்தில் இருந்தே அணு உலைக்கு ஆதரவான கருத்து கொண்டவர்கள். இதிலிருந்தே அவர்களது ஆய்வு எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகப் புலனாகிறது. எனவே மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறோம்.
பேச்சுவார்த்தையில் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்றப் பேச்சுவார்த்தையில் கூட தமிழக அரசுக்கு மதிப்பளித்து கலந்து கொண்டு, மனு மட்டும் கொடுத்துவிட்டு வருவது என முடிவு செய்திருந்தோம். திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை எங்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்டத் தாக்குதல். எந்தவிதத்திலும் எங்கள் போராட்டத்தை நிறுத்த முடியாது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும்வரை எங்கள் போராட்டம் தொடரும்.
தமிழக அரசு எங்களுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. தமிழக ஆளுநர் உரையில் கூட 4704 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது எங்களுக்கு ஆதரவான போக்கையே காட்டுகிறது. 8 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார் உதயகுமார்.
மற்றும் விஜயக்குமார் பாக்கியம் தவிர மற்ற அனைவரும் உரையாற்றினர்.ம.க.இ.க மைய கலை குழுவின் நாடகம் மற்றும் பாடல்கள் நிகழ்த்தப்பட்டது.