Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் அணுஉலை பிரச்சினையில் நான் உதயகுமாருக்கு ஆதரவு : மணிசங்கர் ஐயர்

கூடங்குளம் அணுஉலை பிரச்சினையில் நான் உதயகுமாருக்கு ஆதரவாகவே உள்ளேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. மின்சாரம் முக்கியமா அல்லது பாதுகாப்பு முக்கியமா என்பதை அரசுதான் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சல்மான் குர்ஷித் நேர்மையானவர். அவர் மீது கூறப்படும் குற்றச் சாட்டுக்கள் தவறானவை. ஊழலை எதிர்ப்பதாக கூறி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் நகைப்புக்குரியவை. அவர் பா. ஜ. க. வின் கைப்பாவையாகவே செயற்படுகிறார்.
லோக்பால் சட்ட மூலத்தால் மட்டும் நாட்டில் ஊழலை ஒழித்து விட முடியாது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடத்தில் தான் ஏற்படவேண்டும்.
காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து ராகுல் காந்திதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவருக்கு அனைத்து வகையிலும் உதவ காங்கிரஸ் கட்சி தயாராகவே உள்ளது.
தமிழக காங்கிரஸில் உள்ளவர்கள் அனைவருமே தலைவர்கள் என்பதால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு ஆட்சியை இழந்த 45 ஆண்டு காலமே மீண்டும் தேவைப்படும்.

Exit mobile version