கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பேசுவதற்கு, கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை விதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் மத்திய குழு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலையை ஏற்காமல் கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் அச்சுதானந்தன் கூறி வரும் கருத்துக்களை நிராகரிப்பதாகவும், இது தொடர்பாக அவர் பேசுவதற்கு தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால், இந்த திட்டத்துக்கு விதிவிலக்கு அளிப்பதாக மார்க்சிஸ்ட் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் இரண்டு அணுஉலைகள் ஏற்கனவே கட்டப்பட்டு, அவை முடிவடையும் நிலையில் உள்ளதால் அவற்றை ஏற்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.