Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளத்தைச் சுற்றிவளைத்திருக்கும் அதிரடிப்படை

கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் வருகிற 9-ந்தேதி இடிந்தகரையில் இருந்து பேரணியாக சென்று அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போராட்டக்குழுவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இடிந்தகரையில் போராட்டம் நடக்கும் பகுதிக்குள் மற்ற ஊர்களை சேர்ந்த யாரும் செல்லாத வகையில் போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 2-வது நாளாக கூடங்குளம், வைராவி கிணறு, தாமஸ் மண்டபம், விஜயாபதி விலக்கு ஆகிய பகுதிகளில் அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று போலவே இடிந்தகரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இலங்கை மக்களைக் காப்பாற்றுவதாகக் கூறும் ஜெயலலிதா பொலீஸ்படை சொந்தமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை போலிஸ்படை கொண்டு அழிக்கிறது.

Exit mobile version