Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளத்தில் மேலும் பல அணு உலைகளை அமைக்கத் திட்டம் : தெற்காசிய அணுகுண்டு

மத்திய அரசு கூடங்குளத்தில் ரூ.32 ஆயிரம் கொடி செலவில் மேலும் 2 மெகா அணு உலைகளை அமைக்க முடிவு செய்தது. இதன்படி 3 மற்றும் 4-வது மெகா அணு உலைகள் அமைக்கும் பணி ரஷ்யாவிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அணுசக்தி துறை சிறப்பு செயலாளர் ஏ.பி.ஜோஷி, ரஷியாவின் நிதித்துறை துணை மந்திரி எஸ்.ஏ. ஸ்டோர்சாக் ஆகியோர் மாஸ் கோவில் கையெழுத்திட்டனர்.
கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க ரஷியா, இந்தியாவுக்கு ரூ.17 ஆயிரம் கோடி கடன் வழங்க முன் வந்துள்ளது. மீத முள்ள ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும். இந்த 2 மெகா அணு உலைகளில் இருந்து அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கப்படும்.
இந்திய அணுமின் கழக அதிகாரிகள் கூறும்போது, கூடங்குளம் பகுதியில் 2 அணு உலைகளில் இருந்து ஒரு சில மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கி விடும். அடுத்ததாக மேலும் 2 அணு உலைகள் அமைக்கப்படும். இது தவிர கூடங்குளம் பகுதியில் மேலும் பல அணு உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
புகுஷிமாவில் அணு உலை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பத்து வருடங்களுக்கு நீடிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் அணு உலைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் பெரும் அங்கவீனர் சமூகத்தையே உருவாக்கியுள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதிக்கு அண்மையில் மிகப்பெரும் அணுகுண்டாக மாற்றமடையும் கூடங்குளம் தெற்காசியப் பிராந்த்தியத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களின் சாபக்கேடு
தொடர்புடைய பதிவுகள்:
கூடங்குளம் ஒடுக்குமுறை : தோழர் மருதையனுடன் – ஜீ.ரி.வி உரையாடல்

Exit mobile version