இந்நிலையில், கூடங்குளத்தில் மூன்றாம் மற்றும் நான்காம் அணு உலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் இறங்கியுள்ளன. அடுத்த வாரம் ரஷ்யாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்கும், ரஷ்யா அதிபர் புதினும் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட அணு மின் உற்பத்தியை நிறுத்தப்படுகின்றன. மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உலகின் வறுமைக்கும் ஊழலுக்கும் பெயர் போன இந்தியாவின் தென் கரையோரத்தில் மக்கள் போராட்டங்களுக்கு கிஞ்சித்தும் மதிப்புக்கொடாது இந்திய அரசு மேலும் இரண்டு அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றது.