Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குவான்டநாமோவை கியூபாவிடம் ஒபாமா திரும்பத் தரவேண்டும்:பிடல் காஸ்ட்ரோ கோரிக்கை.

01.02.2009.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமா, குவான்டநாமோவில் உள்ள யு.எஸ். கடற்படை தளத்தை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் கியூபாவிடம் தரவேண்டும் என்று பிடல் காஸ்ட்ரோ கோரிக்கை வைத்துள்ளார்.

கியூப அரசு நடத்தும் கியூபாடிபேட் டாட் காம் இணையதளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். கியூபா மக்களின் விருப்பத்துக்கு எதிராக கியூப மண்ணில் அமரிக்கா படைத் தளம் இருப்பது சர்வதேசச் சட்டங்களின் அப்பட்டமான மீறலாகும். கியூபாவின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பது அமெரிக்காவின் அகந்தையைக் காட்டுகிறது. ஒரு சிறிய நாட்டிடம் தனது அசுர வலிமையை தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

1898ம் ஆண்டில் ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்கும் அமெரிக்க கண்டத்தில் நடந்த யுத்தத்தில் அமெரிக்கா கியூபாவை ஆக்கிரமித்தது. பின்னர் நடந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா கியூபாவை விட்டு வெளியேறியது. 1903ம் ஆண்டில் அன்றைய கியூபா அரசு குவான்டநாமோவை அமெரிக்கா விடம் குத்தகைக்கு விட்டது. குவான்டநாமோ சிறையை மூட ஒபாமா உத்தர விட்டதை வரவேற்ற சாவே ஸூம் குவான்டநாமோவை கியூபாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

காசாவில் பாலஸ்தீனர் களை இஸ்ரேல் கொன்று குவித்து இனப்படுகொலை யை அரங்கேற்றி வருகிறது. அதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஆதரவாக உள்ளார் என்று பிடல் காஸ்ட்ரோ தம் கட்டு ரையில் குற்றம் சாட்டியுள் ளார். புதிய ஜனாதிபதி ஒபா மாவின் வெற்றிக்கு காஸ்ட் ரோ சகோதரர்கள் பாராட்டு தெரிவித்திருந்ததுடன் நேரிடை விமர்சனங்களில் ஈடுபடவில்லை. பாலஸ்தீ னர்களின் படுகொலையில் நமது நண்பர் ஒபாமாவும் பங்கேற்று வருகிறார் என்று “புதிய ஜனாதிபதியின் எண் ணங்களைப் புரிந்து கொள் ளுதல்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பிடல் காஸ்ட்ரோ சுட்டிக் காட்டி யுள்ளார்.

Exit mobile version