Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குவாண்டனாமோ வளைகுடா தடுப்பு முகாமில் இராணுவ மேலதிகாரிகளின் போக்கைக் கண்டித்து சட்ட நடவடிக்கை அதிகாரி பதவி விலகல்

25.09.2008.

குவாண்டானமோ வளைகுடாவில் உள்ள அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச பயங்கரவாத சந்தேக நபர்களுக்கான தடுப்பு முகாமில் இருந்து இயங்கிவந்த அமெரிக்க இராணுவ தரப்பு சட்ட நடவடிக்கை அதிகாரி பதவி விலகியுள்ளார்.

போர்க்குற்றம் புரிந்ததான குற்றச்சாட்டுகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளம் ஆப்கானிய கைதி ஒருவர் விடுதலையாக உதவக்கூடிய தடயங்களை மூடி மறைப்பது என்று மேலிடம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பபு தெரிவிக்கும் முகமாய் தான் பதவியை இராஜினாமா செய்வதாக இவர் கூறுகிறார்.

இப்படி ஒரு விஷயம் வெளியாகியிருப்பது, 2001ஆம் ஆண்டுமுதல் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவரும் அமெரிக்க இராணுவ தீர்ப்பாய அமைப்பின் நேர்மை குறித்து புதிய விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

குவாண்டானமோவில் ததடுத்துவைக்கப்பட்டுள்ள 250 கைதிகளில் சுமார் 80 பேர் மீது வழக்கை ஆரம்பிக்க அமெரிக்க இராணுவ சட்ட நடவடிக்கை அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.

முகம்மது ஜாவாத்த்தை 2002ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கத் துருப்பினர் பிடித்தபோது அவருக்கு 16 வயது. அமெரிக்க சிப்பாய்களின் மேல் கையெறிகுண்டை இவர் வீசினார். அதில் இரண்டு சிப்பாய்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ஆயுள் தண்டனை அளவுக்கான ஓர் தண்டனை பெறக்கூடிய குற்றச்சாட்டுகளுடன் இவர் மீது வரும் டிசம்பரில் வழக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆனால் தற்போது பதவிவிலகியுள்ள இராணுவ சட்ட நடவடிக்கை அதிகாரியான லெப்டினண்ட் கர்ணல் டேரல் வண்டர்வெல்டோ, இந்தக் குறிப்பிட்ட குற்றத்த்தை ஏற்கனவே வேறு இருவர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ளனர், ஆனால் தலைமை அதிகாரிகள் இந்த இளைஞர் மீதான வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாய்க் கூறுகிறார்.
BBC.

Exit mobile version