26.01.2007.
குவாண்டநாமோவில் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 245 கைதிகளை விடுதலை செய்வதற்கும், சிறையை மூடுவதற்கும் பின்னடைவு ஏற்பட் டுள்ளது. சிறைக்கைதிகள் பற்றிய ஆவணங்கள் முழுமையாக இல்லை.
கடந்த வியாழனன்று குவாண்டநாமோ சிறையையும் ஓராண்டுக்குள் மூடும் உத்தரவில் ஒபாமா கையெழுத்திட்டார். சிறை யில் உள்ள 245 கைதிகளையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார். ஆனால் சிறையில் உள்ள கைதிகள் பற்றிய ஆவணங்கள் கிடைக்கவில்லை. இந்த ஆவணங்கள் அனைத்தும் பல நிர்வாகத்துறைகளில் சிதறிக் கிடக்கின்றன என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
எந்தவொரு கைதி பற்றியும் முழுமையான ஆவணங்கள் இல்லை என்றும், இப்பணி எந்தவொரு துறையிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் புஷ் காலத்து நிர்வாக அதிகாரி கள் கூறினர். சிஐஏ உள்ளிட்ட உளவு அமைப்புகள், தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. சிறையில் அடைத்து சித்ரவதை விசாரணைகளில் கவனம் செலுத்திய புஷ் நிர்வாகம், ஆவணப்படுத்துவதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
புதிய அரசில் தலைமை வகிக்கும் அரசியல் பொறுப்பாளர்கள், நிர்வாக அதிகாரிகளின் முடிவுகளைப் புறக் கணித்து ஒபாமாவின் முடிவை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஏரா ளமான கைதிகளை விடு தலை செய்யவும் முடியாது; அமெரிக்காவில் விசா ரணை நடத்தவும் முடியாது என்ற நிலையே ஏற்படும்.
ஆவணங்கள் இல்லாத தற்கு பாதுகாப்புத்துறையே பொறுப்பேற்க வேண்டும். கைது செய்து விசாரணை நடத்தியதுடன் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும், பாதுகாப்புத்துறையே பொறுப்பாக இருந்தது என்று ஒரு உளவுத்துறை அதிகாரி கூறினார். தனிப்பட்ட கைதிகள் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் முழுமையாகவும், முறை யாகவும் தொகுக்கப்பட்டுள்ளன என்று பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜியாப் மோர்ரல் கூறினார்.