Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குழந்தையின் பால் பாகுபாட்டை மாற்றும் அமெரிக்க மருத்துவமனை.

பிறக்கப்போகும் குழந்தையை ஆணா,பெண்ணா என்ற பால் பாகுபாட்டைத் தெரிவு செய்து பெற்றோரின் விருப்பத்திற்கேற்றவாறு கருவிலேயே குழந்தையின் பால் தன்மையை மாற்றுவதற்கான சிகிச்சையை அமெரிக்காவிலுள்ள தனியார் மருத்துவமனை வழங்குகின்றது.இதன் மூலம் பெற்றோர் தாம் விரும்பும் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை உடையவர்களாகின்றனர்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர் டாக்டர் ஜெப்ரி ஸ்ரெயின்பெர்க் பிரிட்டனைச் சேர்ந்த தம்பதிகளுக்கு தமது குழந்தையின் பால் பாகுபாட்டைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்.

ஆனால், குழந்தையின் பால் பாகுபாட்டைத் தெரிவு செய்யும் நடைமுறை பிரிட்டனில் சட்டத்துக்கு முரணானதாக உள்ளது.

இதேவேளை, குழந்தையின் கண்ணின் நிறம், தலைமுடியின் நிறம், தோலின் நிறம் ஆகியவற்றையும் மாற்றமுடியுமென நியூயோர்க்கின் இச் சிகிச்சை நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த அறிவிப்பினை எதிர்த்து டாக்டர் ஸ்ரெயின்பெர்க்கிற்கு எதிராக கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் சட்டதிட்டங்களும் கருவின் பால் பாகுபாட்டைக் கண்டறிவதற்கானதாகவே உள்ளதே தவிர, அதனை மாற்றுவதற்குரிய உரிமையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version