Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குழந்தைகள் மீதான பாலின அவச்செயல் குறித்து விசாரணை.

 
 ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் குழந்தைகளை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியது குறித்து தேசிய விசாரணை நடத்த வேண்டுமென்று ஜெர்மனியிலும், அயர்லாந்திலும் வலுவான குரல்கள் எழுந்துள்ளன.ஆண்டு தொடங்கியது முதல் நாள்தோறும் இது போன்ற புகார்கள் எழுந்த வண்ணமுள்ளன. “ஆலயங்களிலும், பள்ளிகளிலும் எழுந்துள்ள பாலியல் புகார்கள் பெரும் சவால்களாக நிற்கின்றன. அனைத்துப் புகார்கள் குறித்தும் முழுமையான, வெளிப்படை யான விசாரணைகள் மூலமே அவற்றுக்குத் தீர்வு காண முடியும்” என்று ஜெர்மனி அதிபர் ஏஞ் செலா மெர்க்கெல் கூறியுள்ளார். பாதிரியார்களின் பாலியல் குற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மூத்த அரசியல்வாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்தில் பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளது. திருச்சபை மீது மீண்டும் நம்பிக்கையைக் கட்டுவதற்கு புகார்கள் மீது தேசிய விசாரணை நடத்துவதே உதவக்கூடும் என்று டப்ளின் தலைமைப் பேராயர் கூறினார். இந்த ஊழலை மூடி மறைக்க உதவியதாகக் கூறப்படும் கார்டினல் சீன் பிராடி பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை பிராடி நிராகரித்து விட்டார். ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் புதிய புதிய புகார்கள் உதித்த வண்ணம் உள்ளன.

சிறுவர்கள் மீதான பாலின வன்மை ஒரு அருவருப்பான குற்றம் என்று ஜெர்மனி நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஏஞ்செலா மெர்க் கெல் குறிப்பிட்டுள்ளார். உண்மையைத் தேடி மெய்யாகவே என்ன நடந்தது என்பதை அறிவதே நமது சமுதாயத்தின் முன் உள்ள ஒரே வழி என்று அவர் கூறி னார். என்ன நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை, பாதிப்பை சரி செய்ய முடியாது என்றும் அவர் சொன்னார்.

அயர்லாந்தில் பாதிரியார் பிரண்டன் ஸ்மித் இழைத்த தவறுகள் குறித்து மவுனம் காப்போம் என்று இரு 10 வயது சிறார்களிடம் கட்டாய உறுதிமொழி பெறப்பட்ட நிகழ்ச்சியின் போது கார்டினல் பிராடி உடன் இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். தூய பாட் ரிக்ஸ் தின நிகழ்ச்சியின் போது அவர் இந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

Exit mobile version