Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாய்மார் விடுதலை செய்ய உதவுமாறு கோரிக்கை

குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளாகன தாய்மார், தங்களை பிணையிலோ அல்லது பொது மன்னிப்பிலோ விடுதலை செய்வதற்கு உதவுமாறு கோரி ஜனாதிபதியின் பாரியாரும் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அமைப்பின் இயக்குனருமான சிராந்தி ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனப்பி வைத்துள்ளனர்.

கடிதத்தில், குழந்தைகளுடன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல தமிழ்ப் பெண்கள் காலங்கள் பல கடந்தும் விடுதலை எப்போது கிடைக்கும் எனத்தொரியாது கண்ணீருடன் வாழ்ந்து வருகிறோம் எனக்குறிப்பிட்டு தங்களை விடுவிக்க உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

காணாமல் போன தனது கணவைனத் தேடிக் குழந்தையுடன் கொழும்பு வந்த ரவிச்சந்திரன் – விஜிதா 2008.11.03 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கற்பினியான நிலையில் இறுதி யுத்தத்தின் போது 2009.04.21 அன்று சரணடைந்த தர்சன் – தங்கலா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இவர் 2009.10.04 அன்று சிறையில் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். சந்திரகுமார்- ஜெயந்தினி 2008.03.03 அன்று கைது செய்யப்பட்டார். இவரும் 2008.10.03 அன்று சிறையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். லட்சுமணன் அன்னலெட்சுமி 2007.07.02 அன்று கைதுசெய்யப்பட்டவர். இவருக்கும் ஆண் குழ்ந்தையொன்றுள்ளது. லிங்கேஸ்வரன் – லதா 2009.07.22 அன்று கைது செய்யப்பட்டவர். இவருக்கும் பெண் குழந்தையொன்றுள்ளது. இவ்வாறு பல பெண்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுடன் சிறையில் வாடும் தாய்மார் தங்களினதும் தங்கள் பிள்ளைகளினதும் விடுதலை வேண்டி உருக்கமான கடிதமொன்றினை எழுதியிருக்கின்றனர்.

Exit mobile version